000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200519b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a நடுகல் வீரன் |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a போரில் இறந்துபட்ட வீரனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனைவி மக்களுக்கும் எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். மூலங்குட்டை ஊரில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோயில் வாசலில் திறந்தவெளியில் உள்ள இந்த நடுகல் வீரமுடன் கணவனுடன் உயிர் துறந்த பெண்ணுக்கும் சேர்த்து எடுப்பிக்கப்பட்டுள்ளதால் இதனை சதிக்கல் என்றும் கூறலாம். இந்நடுகல் புடைப்புச் சிற்பமாக பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் வாளை ஓங்கிய நிலையில் கேடயத்துடன் நிற்கிறான். அருகில் அவனது மனைவி நிற்கிறாள். அவளின் காலகே அவர்களின் குழந்தையும் நிற்கிறது. குடும்பத்துடன் எடுப்பிக்கப்பட்ட நடுகற்கள் ஒரு சிலவற்றுள் இதுவும் குறிப்பிடத்தக்கதாகும். வீரன் மற்றும் அவன் மனைவியின் ஆடையணிகளைக் கொண்டு இச்சிற்பத்தின் காலத்தை கணிக்கலாம். |
520 | : | _ _ |a தருமபுரி மாவட்டத்தில் மூலன்குட்டை என்னும் ஊரில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் வாயிற்பகுதியில் இரு நடுகற்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றன. இவ்விரு நடுகற்களும் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல் இறந்து பட்ட வீரனோடு உயிர் துறந்த அவனது மனைவியும் சேர்ந்து அந்த நடுகல்லில் சிறப்பிக்கப்பட்டுள்ளாள். |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, தருமபுரி, தர்மபுரி, மூலங்குட்டை, மூலன்குட்டை |
700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மூலங்குட்டை |b மூலங்குட்டை சென்றாய பெருமாள் கோயில் |c மூலங்குட்டை |d தருமபுரி |f தருமபுரி |
850 | : | _ _ |a மூலங்குட்டை சென்றாய பெருமாள் கோயில் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 12.05698994 |
915 | : | _ _ |a 78.11835051 |
995 | : | _ _ |a TVA_SCL_0001509 |
barcode | : | TVA_SCL_0001509 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001509/TVA_SCL_001509_தருமபுரி_மூலங்குட்டை-குறும்பர்மண்டு_நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |